Image default
Blog

இரண்டு நாள் பயணமாக ஈரோடு வந்த முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு…!

ஈரோடு: இரண்டு நாள் பயணமாக நேற்று (டிச.19) ஈரோடு வருகை தந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் 2 கோடியாவது பயனாளியின் வீட்டுக்குச் சென்ற முதல்வர் அவருக்கு மருந்து பெட்டகத்தை வழங்கி, நலம் விசாரித்தார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மாவட்டம்தோறும் சென்று கள ஆய்வு மேற்கொள்வதோடு, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, புதிய திட்டப் பணிகள் தொடக்க விழாக்களில் பங்கேற்று வருகிறார். .
இதற்காக, இன்று காலை விமானம் மூலம் கோவை வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், சாலை மார்க்கமாக ஈரோடு வருகை தந்தார். அவருக்கு வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி தலைமையில், விஜயமங்கலம் சுங்கச்சாவடி, பெருந்துறை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் திமுகவினர் வரவேற்பு அளித்தனர். அப்போது காரில் இருந்து இறங்கி நடந்து சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.


இதன் தொடர்ச்சியாக ஈரோடு மாவட்டம் நஞ்சனாபுரம் கிராமத்திற்கு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் 2 கோடியாவது பயனாளியான சுந்தராம்பாளைச் (55), சந்தித்து, மருந்து பெட்டகத்தை வழங்கி நலம் விசாரித்தார். இதனைத் தொடர்ந்து தொடர் சேவை சிகிச்சையில் உள்ள வசந்தா (60), என்பவரைச் சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரிடமும் மருத்து பெட்டகத்தை வழங்கி நலம் விசாரித்தார். அப்போது, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Related posts

“திமுகவை வீழ்த்த பாஜக கூட்டணிக்குஅதிமுக வரவேண்டும்” – தினகரன் அழைப்பு…!

kannan

போடிமெட்டு மலைச்சாலையின் 10-வது கொண்டை ஊசி வளைவு அருகே சரிந்து விழுந்த ராட்சத பாறைகள்.

kannan

தேனி – பெரியகுளம் கல்லாற்றில் வெள்ளம்: ஊர் திரும்ப முடியாமல் மலைக் கிராம மக்கள் தவிப்பு

kannan

Leave a Comment