Image default
Blog

கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கு..! தமிழக அரசுக்கு அதிர்ச்சி கொடுத்தஉச்ச நீதிமன்றம்..!

கடந்த ஜூன் மாதம் விஷச்சாராயம் அருந்தியதில் 66 பேர் உயிரிழந்த சம்பவம் தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணைக்கு மாற்றப்பட்டது.  இந்த வழக்கு சிபிசிஐடி  விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்த  அதிமுக, பாமக, தேமுதிக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் வலியுறுத்தினர். இதனையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டது.   இந்த வழக்குகள் அனைத்தும் நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் பாலாஜி அடங்கிய அமர்வு விசாரணை நடத்தியது. இந்த வழக்கு விசாரணையில் அதிமுக தரப்பில் கடந்த 2023ம் ஆண்டில் மரக்காணத்தில் இதேபோல, விஷச் சாராயம் குடித்து 30 பேர் பலியானர். அதன் தொடர்ச்சியாக கள்ளக்குறிச்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் காவல் துறையிடம் புகார் அளித்தனர். மேலும்  சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். இருப்பினும் தமிழக அரசு சார்பாக எந்த வித தடுப்பு  நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அந்த பகுதியில் தங்கு தடையின்றி சாராய விற்பனை நடந்து வருகிறது. மேலும் அண்டை மாநிலமான புதுச்சேரியில் இருந்து கள்ளச்சாராயத்தில் கலக்க எத்தனால் கொண்டு வரப்பட்டுள்ளதால், விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என வாதிட்டார்.

இதனை தொடர்ந்து பாமக வழக்கறிஞர் கே.பாலு தரப்பில், ஆண்டுதோறும் இதுபோல் தொடர்வதால், அரிதான வழக்காக கருதி இந்த வழக்கை சிறப்பு புலனாய்வு குழு அல்லது சிபிஐக்கு வழக்கை மாற்ற வேண்டும் என கோரினர். இதே கருத்தையே பாஜக தரப்பிலும் வலியுறுத்தப்பட்டது.  இந்த வாதங்களுக்கு  பதிலளித்த தமிழக அரசுத்தரப்பில், எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகளை தடுக்க ஆலோசனைகள் வழங்க ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. மேலும்  வழக்கை விசாரிக்க சிபிசிஐடி டி.எஸ்.பி. தலைமையில், 50 பேர் அடங்கிய 16 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை கைது செய்யப்பட்ட 24 பேரில் 11 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும்  மாவட்ட ஆட்சியர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும்,  காவல் கண்காணிப்பாளரும், மதுவிலக்கு பிரிவு அதிகாரிகளும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.   இந்த வழக்கின் அனைத்து தரப்பு வாதங்களும் கேட்ட நீதிபதிகள் கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது. இதையடுத்து சென்னை உயர்நீதிமன்ற இந்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வில்  விசாரணைக்கு வந்தது.  அப்போது சென்னை உயர்நீதிமன்ற உத்தரவில் தலையிட வேண்டிய அவசியம் இல்லை. ஆகையால் சிபிஐ விசாரணைக்கு தடையில்லை கூறிய நீதிபதிகள் தமிழக அரசின் மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.   

Related posts

சதுரகிரி மலைப் பாதை ஓடைகளில் காட்டாற்று வெள்ளம் – அதிகாரிகள் ஆய்வு…

kannan

உங்கள் ஆரோக்கியமே ! எங்கள் முன்னுரிமை!! FNAC என்பது ஃபைன் நீடில்ஆஸ்பிரேஷன் சைட்டாலஜிபரிசோதனை முழு விபரம்….!

kannan

ராமேஸ்வரம்: பாம்பன் புதிய ரயில் பாலத்தில் ஆய்வு இன்ஜினை இயக்கி, ரயில்வே விகாஸ் நிகாம் லிமிடெட் அதிகாரிகள் நேற்று ஆய்வு நடத்தினர்.

kannan

Leave a Comment