Image default
Blog

தமிழகத்தில் பைக் டாக்சி. இயங்கதடையில்லை – தொழிலாளர்கள்மகிழ்ச்சி….!

சென்னை: தமிழகத்தில் பைக் டாக்சி இயங்க தடையில்லை என்று அறிவித்த முதல்வர், போக்குவரத்து அமைச்சருக்கு பைக் டாக்சி தொழிலாளர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.இது தொடர்பாக அச்சங்கத்தினர் வெளியிட்ட அறிக்கையில், “தமிழகத்தில் நகர்ப்புற போக்குவரத்தை மேம்படுத்துவதில் பைக் டாக்சிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இதன் மூலம் மாநில அரசுக்கு நூற்றுக்கணக்கான கோடிகளில் வருவாயும் கிடைக்கிறது. தேவையான நேரத்தில் வேலை, போதிய வருமானம் போன்றவற்றை வழங்குவதன் மூலம் பொருளாதார ரீதியாக ஒருவர் சுதந்திரம் பெறுவதோடு, பைக் டாக்சி தொழில் பொருளாதாரத்துக்கும் பங்களிப்பு செய்கிறது.

இத்தகைய சூழலில் பைக் டாக்சி தொழிலாளர்களுக்கு ஆதரவளித்த முதல்வர், போக்குவரத்துத் துறை அமைச்சர் மற்றும் தமிழக அரசுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இதன் மூலம் நிலையான வருமானத்தை ஈட்டி, தொழிலாளர்கள் கண்ணியமிக்க வகையில் வாழ முடியும். மேலும் அரசுடன் ஒருங்கிணைந்து அனைவருக்குமான நிலையான போக்குவரத்தை வழங்குவதற்கு உறுதுணையாக இருப்போம்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Related posts

சவுக்கு சங்கருக்கு எதிராக பிடி வாரண்ட் பிறப்பித்து மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது…..!

kannan

போடிமெட்டு மலைச்சாலையின் 10-வது கொண்டை ஊசி வளைவு அருகே சரிந்து விழுந்த ராட்சத பாறைகள்.

kannan

தேனி – பெரியகுளம் கல்லாற்றில் வெள்ளம்: ஊர் திரும்ப முடியாமல் மலைக் கிராம மக்கள் தவிப்பு

kannan

Leave a Comment