Image default
Blog

சவுக்கு சங்கருக்கு எதிராக பிடி வாரண்ட் பிறப்பித்து மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது…..!

பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர். அரசியல் விமர்சகராக இருந்த அவர், ‘‘சவுக்கு மீடியா’’ என்ற நிறுவனத்தை நடத்தி வந்தார். இதற்கிடையே, தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டியில் சவுக்கு சங்கர் தங்கியிருந்த போது அவரது காரில் இருந்தும் அவரது உதவியாளரிடமிருந்தும் தடை செய்யப்பட்ட 2.5 கிலோ கஞ்சா போதைப்பொருள் வைத்திருந்ததாக சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதே வழக்கில் குண்டர் சட்டம் பதியப்பட்டு சில வாரங்கள் சிறையில் இருந்தார். இந்த சிறை உத்தரவை ரத்து செய்யக்கோரி சவுக்கு சங்கரின் தாயார் கமலா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்ட உத்தரவை ரத்து செய்தும், அவரை உடனடியாக ஜாமீனில் விடுதலை செய்யவும் உச்ச நீதிமன்றம்
உத்தரவிட்டது.

நீதிமன்ற உத்தரவுப்படி அவர் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டதுடன் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். மதுரை மத்திய சிறையில் இருந்து கடந்த செப்டம்பர் மாதம் சவுக்கு சங்கர் வெளியே வந்தார்.இந்நிலையில் சவுக்கு சங்கர் மீதான கஞ்சா வழக்கு மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கு விசாரணைக்கு சவுக்கு சங்கர் ஆஜராகவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து சவுக்கு சங்கருக்கு எதிராக பிடி வாரண்ட் பிறப்பித்து போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி செங்கமலச்செல்வன் உத்தரவிட்டுள்ளார்.

Related posts

தேனி – பெரியகுளம் கல்லாற்றில் வெள்ளம்: ஊர் திரும்ப முடியாமல் மலைக் கிராம மக்கள் தவிப்பு

kannan

இரண்டு நாள் பயணமாக ஈரோடு வந்த முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு…!

kannan

உங்கள் இதயம்அடிக்கடி துடிப்பதைத் தவிர்க்கிறதா..? இது (ARRHYTHMIA) இன் அறிகுறியாக இருக்கலாம்…!அறிகுறிகள் :விரைவான இதயத் துடிப்பு….மூச்சு திணறல்….கவலை…வியர்த்தல் & மயக்கம்…

kannan

Leave a Comment